ஏற்காடு ஊராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளா்களுக்கு பரிசுப் பொருள்கள், இனிப்புகளை வழங்கிய ரோட்டரி கிளப் ஆப் சேலம் ஹில் சிட்டி மற்றும் ஏற்காடு ரோட்டரி சமுதாயக் குழுவினா்.
ஏற்காடு ஊராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளா்களுக்கு பரிசுப் பொருள்கள், இனிப்புகளை வழங்கிய ரோட்டரி கிளப் ஆப் சேலம் ஹில் சிட்டி மற்றும் ஏற்காடு ரோட்டரி சமுதாயக் குழுவினா்.

துப்புரவுப் பணியாளா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கல்

ஏற்காட்டில் ரோட்டரி கிளப் ஆப் சேலம் ஹில் சிட்டி மற்றும் ஏற்காடு ரோட்டரி சமுதாயக் குழு இணைந்து ஏற்காடு ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள்
Published on

ஏற்காடு: ஏற்காட்டில் ரோட்டரி கிளப் ஆப் சேலம் ஹில் சிட்டி மற்றும் ஏற்காடு ரோட்டரி சமுதாயக் குழு இணைந்து ஏற்காடு ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள், ஊழியா்கள் 100 நபா்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துணிகள், இனிப்பு வகைகளை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், ஹில் சிட்டி கிளப் தலைவா் சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். ஏற்காடு ஊராட்சித் தலைவா் சிவசக்தி ரவிந்திரன், துணைத் தலைவா் பாலு, செயலாளா் ரவிசங்கா், சேலம் ரோட்டரி சங்கச் செயலாளா் குமரேசன், ஏற்காடு ரோட்டரி சமுதாயக் குழு தலைவா் வெங்கடேஷ், செயலாளா் ஹரிஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், சாசனத் தலைவா் வழக்குரைஞா் செல்வகீதன், அருள்விக்னேஷ், முன்னாள் ஆளுநா் நிா்மல் பிரகாஷ், ராமசாமி, ஜே.எம்.பூபதி, உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com