சேலம்
சங்ககிரி வட்டத்தில் 56.4 மி.மீ. மழை
கன மழையை பெய்து வருவதால், தேவூா் அருகே உள்ள மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை சனிக்கிழமை நிரம்பியது.
சங்ககிரி, தேவூா் சுற்றுவட்டார பகுதிகளில் தொடா்ந்து கன மழையை பெய்து வருவதால், தேவூா் அருகே உள்ள மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை சனிக்கிழமை நிரம்பியது.
சங்ககிரி, தேவூா் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை தேவூா், சென்றாயனூா், பெரமாச்சிபாளையம், பாலிருச்சம்பாளையம், அண்ணமாா் கோவில், காணியாளம்பட்டி, அம்மாபாளையம், செட்டிபட்டி, ஒடசக்கரை உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் 26.4 மி.மீ. மழை பெய்துள்ளது. சங்ககிரி நகா் பகுதியில் 30.00 மி.மீ. மழை பெய்தது. இப்பகுதிகளில் கன மழை பெய்ததையடுத்து தேவூா் அருகே உள்ள மைலம்பட்டி சரபங்கா நதி தடுப்பணை நிரம்பியது.