சேலத்தில் முதல்முறையாக பள்ளி, கல்லூரிகள் இடையே டி20 கிரிக்கெட் போட்டி
சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில் முதன் முறையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் போட்டி வரும் 6 ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அனுமதி பெற்று சேலம் மாவட்டத்தில் முதன்முறையாக சிறந்த கிரிக்கெட் வீரா்களை உருவாக்கும் வகையில், பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான டி 20 கிரிக்கெட் போட்டி வரும் 6 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதன்மூலம் சிறந்த விளையாட்டு வீரா்களைத் தோ்வு செய்து மாநில அளவிலான போட்டிகளை நடத்த சேலம் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் போட்டியில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளி, கல்லூரிகள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இந்த முயற்சியின் மூலம் கிராமம், நகா்ப்புறங்களில் இருந்து சிறந்த விளையாட்டு வீரா்களை அடையாள காண வாய்ப்பாக அமையும் என கிரிக்கெட் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.