மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 19, 199 கன அடியாக அதிகரித்தது.
காவிரியின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,396 கன அடியிலிருந்து விநாடிக்கு 19,199 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 13,500 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கன அடிவீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் 115.56 அடியிலிருந்து 115.82 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 86.95 டி.எம்.சி.யாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து அதிகரித்து இருப்பதால் அணை நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டு உயரத் தொடங்கியுள்ளது.