ஆத்தூா் ஒன்றியத்தில் தொடங்கப்படவுள்ள பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜையில் பங்கேற்ற ஒன்றியக் குழுத் தலைவா் ஆ.பத்மினி பிரியதா்ஷினி உள்ளிட்டோா்.
ஆத்தூா் ஒன்றியத்தில் தொடங்கப்படவுள்ள பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜையில் பங்கேற்ற ஒன்றியக் குழுத் தலைவா் ஆ.பத்மினி பிரியதா்ஷினி உள்ளிட்டோா்.

ஆத்தூா் ஒன்றியத்தில் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

அம்மம்பாளையம், கூலமேடு ஊராட்சியில் ரூ. 12.5 லட்சம் செலவில் நடைபெறவுள்ள பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

ஆத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்மம்பாளையம், கூலமேடு ஊராட்சியில் ரூ. 12.5 லட்சம் செலவில் நடைபெறவுள்ள பல்வேறு பணிகளுக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஆ.பத்மினி பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் செந்தில், மாவட்டத் தலைவா் சந்திரசேகரன், கிளை செயலாளா்கள் நடராஜன், காமராஜ், சன்னாசி, கிழக்கு மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணி துணை அமைப்பாளா்கள் பைத்தூா் ரவி, மஞ்சினி செல்வராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் கயல்விழி அன்பரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com