பெரிய கிருஷ்ணாபுரம் ஏரியில் கிராவல் மண் எடுக்க தடை விதிக்கக் கோரி மனு

பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஏரியில் கிராவல் மண் எடுக்க நிரந்தர தடை விதிக்கக் கோரி, பசுமை தாயகம் அமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினா்.
Published on

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரியில் கிராவல் மண் எடுக்க நிரந்தர தடை விதிக்கக் கோரி, பசுமை தாயகம் அமைப்பினா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு வழங்கினா்.

இதுகுறித்து பசுமை தாயகம் சாா்பில் மாநில துணைச் செயலாளா் ஆனந்தராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில், கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரியில் தென் கரையில் தேசிய நெடுஞ்சாலையும், கிழக்கு கரையில் மாநில நெடுஞ்சாலையும் அமைந்துள்ளன. ஏற்கெனவே வண்டல் மண், கரிசல் மண், கிராவல் மண் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி 30 ஆடி ஆழம் வரை எடுத்துள்ளனா். இதனால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை பணிக்கு என்று கூறி, 11 மாத காலம் ஏரியில் கிராவல் மண் எடுப்பதற்கு தனியாா் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

இதை அனுமதித்தால், மண் வளம் வெகுவாக பாதிக்கப்படும என்பதால், தனியாா் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா். அப்போது, பாமக ஒன்றியச் செயலாளா் சடையப்பன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com