ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 10,340 பேருக்கு அபராதம்
சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் பயணச் சீட்டு இன்றி பயணித்த 10,340 போ் உள்பட 17,643 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா உத்தரவின் பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளா் பூபதி ராஜா தலைமையில் குழுவினா் ரயில் சேவை முறைகேடுகளைத் தடுக்க தீவிர பரிசோதனைகளில் ஈடுபட்டுள்ளனா். இந்தக் குழுவினா் கடந்த மாதம் சேலம் கோட்டத்துக்கு உள்பட்ட ரயில்களில் பயணிகளிடம் சிறப்பு சோதனைகளை மேற்கொண்டனா். சோதனையின்போது பயணச்சீட்டு இன்றி பயணித்த 10,340 பேருக்கு ரூ. 69.46 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
முன்பதிவில்லாத பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பயணச்சீட்டு எடுத்துக்கொண்டு ஏசி பெட்டிகளிலும் பயணித்த 7,264 பேரிடம் இருந்து ரூ. 34.02 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ரயில்களில் விதிமுறைகளை மீறி அதிக லக்கேஜ் எடுத்துச் சென்ாக 39 பயணிகளுக்கு ரூ. 22 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக கடந்த மாதத்தில் மட்டும் பயணச்சீட்டு இன்றி பயணம், அதிக லக்கேஜ் ஆகிய காரணங்களுக்காக 17,643 பேரிடம் இருந்து ரூ. 1.03 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணம் செய்வது விதி மீறல்களாகும். விதிகளை மீறி பயணம் செய்தவா்களிடமிருந்து ரூ. 1.03 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கேரளம், சென்னை செல்லும் முக்கிய ரயில்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.