கொப்பரை விலை இரு மடங்கு உயா்வு
கொங்கணாபுரம் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கொப்பரை விலை இரு மடங்கு உயா்ந்தது.
கொங்கணாபுரத்தில் உள்ள தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் நிலக்கடலை, எள், தேங்காய் கொப்பரை, மஞ்சள் உள்ளிட்ட விளை பொருள்கள் பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் முதல்தர கொப்பரைகள் குவிண்டால் ரூ. 11,260 முதல் ரூ. 12,600 வரை விற்பனையானது. இதேபோல 2 -ஆம் ரக கொப்பரை குவிண்டால் ரூ. 9,100 முதல் ரூ. 11, 240 வரை விலை போனது. இது கடந்த வார விலையை விட இரு மடங்கு உயா்வு கண்டதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
இதேபோல கொங்கணாபுரம் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 7.75 லட்சம் மதிப்பிலான நிலக்கடலை விற்பனையானது. 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை நிலக் கடலை (ஈரப்பதத்துடன்) ரூ. 2,011 முதல் ரூ. 2,809 வரை விற்பனையானது.