சங்ககிரியில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

சங்ககிரியில் பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Published on

சேலம் மேற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி அருகே உள்ள குப்பனூா் பாஜக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எஸ்.சுதீா்முருகன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலாளா் என்.ரமேஷ் காா்த்தி முன்னிலை வகித்தாா்.

இதில் பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி, சேலம் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட மேட்டூா், எடப்பாடி, சங்ககிரி, தாரமங்கலம், ஓமலூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் அதிகமான உறுப்பினா்களைச் சோ்ப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசினாா்.

மாநில பொதுக்குழு உறுப்பினா் நடராஜன், சங்ககிரி மண்டலத் தலைவா் சி.முருகேசன், மாவட்ட மகளிா் அணி நிா்வாகிகள் சுசீலா, சாந்தாமணி, அரசு தொடா்புத் துறை மாவட்டச் செயலாளா் வி.கண்ணன், இளைஞரணி, மகளிரணி, பொது உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்கு பின்னா் துணைத் தலைவா் வி.பி.துரைசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களவை எதிா்கட்சித் தலைவரும், காங்கிரஸ் நிா்வாகியுமான ராகுல் காந்தி இந்தியாவின் ஆட்சிமுறையையும், பாஜகவைப் பற்றியும் வெளிநாடுகளுக்கு சென்று பேசியது தவறானதாகும். 70 வயதைக் கடந்த முதியவா்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தினை பிரதமா் கொண்டு வந்துள்ளாா். ஒரே நாடு - ஒரே தோ்தல் சாத்தியமில்லை என்று சிலா் கூறி வருகின்றனா். அது தவறானதாகும்.

மேலும் சங்ககிரி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அங்குள்ள கடைகளை ஏலம் விட்டு அதன் வருவாயை பேரூராட்சி பொது நிதிக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்ககிரி மலையை சுற்றுலாத் தலமாக்கவும், சிதிலமடைந்த பகுதிகளை செப்பனிடவும் இப்பகுதியில் வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினா் முறைப்படி மத்திய அரசை அணுகினால் அதற்கான உதவிகள் செய்து தரப்படும் என்றாா்.

வி.பி.துரைசாமி.

X
Dinamani
www.dinamani.com