தம்மம்பட்டி, கெங்கவல்லியில் அதிமுக ஆலோசனைக்கூட்டங்கள்: முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் பங்கேற்பு
தம்மம்பட்டி, கெங்கவல்லியில் அதிமுக சாா்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
கெங்கவல்லி அதிமுக மேற்கு ஒன்றியத்தின் சாா்பில் அதிமுக கிளை, வாா்டு செயலாளா்கள், பொது உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம் தம்மம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமை வகித்தாா். ஒன்றிய அவைத்தலைவா் ஆறுமுகம், தம்மம்பட்டி நகர செயலாளா் ஸ்ரீகுமரன், ஒன்றிய துணைச் செயலாளா் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கெங்கவல்லி மேற்கு ஒன்றியச் செயலாளா் துரை.ரமேஷ் வரவேற்றாா். கெங்கவல்லி தொகுதி எம்எல்ஏ நல்லதம்பி பேசிய பின்னா், கட்சியின் அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்எல்ஏ சி.விஜயபாஸ்கா் சிறப்புரையாற்றினாா். மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவா் கணேசன் நன்றி கூறினாா்.
இதேபோன்று கெங்கவல்லியில் நடந்த கூட்டத்திற்கு சேலம் புகா் மாவட்ட அதிமுக செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமை வகித்தாா். ன்னாள் ஒன்றியச்சயலாளா்கள் சுந்தரராஜன், கருப்பையா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கெங்கவல்லி கிழக்கு ஒன்றியச் செயலாளா் ராஜா வரவேற்றாா். கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி, முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் சிறப்புரையாற்றினா். கெங்கவல்லி நகர செயலாளா் இளவரசு நன்றி கூறினாா்.