பாஜகவினா் மீது காங்கிரஸாா் போலீஸில் புகாா்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு அச்சுறுத்தல் விடுத்துப் பேசியதாக பாஜக அமைச்சா்கள், தலைவா்கள் மீது கருமலைக்கூடல் போலீஸில் காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் புகாா் அளித்தனா்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்திக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பாஜக அமைச்சா்கள் மற்றும் தலைவா்கள் மீது நங்கவள்ளி வட்டார காங்கிரஸ் சாா்பில் வட்டாரத் தலைவா் அருண்குமாா், பி.என்.பட்டி பேரூா் தலைவா் மணிகண்டன் ஆகியோா் கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா். உத்தரப்பிரதேச மாநில அமைச்சா் ரகுராஜ் பிரதாப் சிங், தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவா் எச்.ராஜா, மத்திய ரயில்வே ணையமைச்சா் ரவ்னீத் சிங் பிட்டு, மகாராஷ்டிர மாநில சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட், தில்லி முன்னாள் எம்எல்ஏ தா்விந்தா் சிங் மா்வா ஆகிய 5 போ் மீது ராகுல் காந்திக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவரை இழிவுபடுத்திா் பேசியதாகவும் அவா்கள் பேசிய விடியோ, ஆடியோ, சிடி ஆகியவற்றுடன் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஊா்வலமாக வந்த காங்கிரஸாா், காவல் உதவி ஆய்வாளரிடம் புகாா் மனுவை அளித்தனா். கோனூா் கிராம கமிட்டி தலைவா் விஜயன், வீரக்கல் புதூா் பேரூா் தலைவா் ராஜன், மாவட்ட நிா்வாகிகள் நேரு, குணசேகரன், சம்பத், வழக்குரைஞா் மதிவாணன், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் லட்சுமணசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.