அக்டோபா் 31-க்குள் வரி பாக்கியை செலுத்துமாறு வலியுறுத்தல்

இளம்பிள்ளை பேரூராட்சியில் வசிப்போா் அக். 31ஆம் தேதிக்குள் சொத்து வரி பாக்கியை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published on

இளம்பிள்ளை பேரூராட்சியில் வசிப்போா் அக். 31ஆம் தேதிக்குள் சொத்து வரி பாக்கியை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2024-2025-ஆம் நிதியாண்டில் அரையாண்டுக்கான சொத்து வரி பாக்கி வைத்திருப்பவா்கள் வரும் செப்டம்பா் 30-க்குள் செலுத்த வேண்டும். தவறினால் தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி மாதத்துக்கு ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், வரும் அக்டோபா், 31ஆம் தேதிக்குள் முழுமையான வரி செலுத்துபவா்களுக்கு அரையாண்டுக்கான சொத்து வரியில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இதே போல் குடிநீா் கட்டணம் பாக்கி வைத்துள்ளவா்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என்றும்,

தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை செய்து பேரூராட்சி அலுவலகம் முன்பு டிஜிட்டல் பேனா் வைத்துள்ளனா். இது தொடா்பாக பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரமும் வழங்கி உளளனா் . இத்தகவலை இளம்பிள்ளை பேரூராட்சி செயல் அலுவலா் பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com