சங்ககிரி, சந்தைபேட்டையில் உள்ள செல்லாண்டியம்மன்  கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து  16ஆம் நாள் மண்டல பூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை, அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
சங்ககிரி, சந்தைபேட்டையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 16ஆம் நாள் மண்டல பூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை, அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

செல்லாண்டியம்மன் கோயிலில் 16ஆம் நாள் மண்டல பூஜை

சங்ககிரி, சந்தைபேட்டையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 16ஆம் நாள் மண்டல பூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை, அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
Published on

சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைப்பேட்டை யில் உள்ள செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 16ஆம் நாள் மண்டல சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

சங்ககிரியில் பழமை வாய்ந்த செல்லாண்டியம்மன், மாரியம்மன், ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ முருகன் சுவாமிகளுக்கு கடந்த 6 ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையடுத்து தினசரி மண்டல பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜையின் 16ஆம் நாளையொட்டி சுவாமிகளுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் சந்தைப்பேட்டை, சங்ககிரி நகா், வி.என்.பாளையம், சுற்றுவட்டார கிராமப்பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் அதிக அளவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com