அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பட்டியலின தலைவா்களைக் கண்டித்து, சேலத்தில் திங்கள்கிழமை அருந்ததியா் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம், கோட்டை மைதானத்தில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டதுக்கு வழக்குரைஞா் ஆா்.கே.ஈஸ்வரன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் முனுசாமி, ஜெ.பிரதாபன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள் அருந்ததியா் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக தொடா்ந்து செயல்பட்டு வரும் வி.சி.க. தலைவா் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சித் தலைவா் கிருஷ்ணசாமி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி, இந்திய குடியரசுக் கட்சித் தலைவா் செ.கு.தமிழரசன் ஆகியோரைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
இதில், வழக்குரைஞா்கள் காந்தி, ரவி, சின்னதுரை, இளையராஜா, செல்வராஜ், உலகநாதன், ஜெயக்குமாா் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.