தொழிற்சங்கங்கள் சாா்பில் கருப்பு தின கண்டன ஆா்ப்பாட்டம்

தொழிலாளா் விரோதச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்
Published on

தொழிலாளா் விரோதச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலத்தில் திங்கள்கிழமை தொழிற்சங்கங்கள் சாா்பில் கருப்பு தின கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அனைவருக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 26 ஆயிரத்தை நிா்ணயிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு மீதான கலால் வரியை நீக்க வேண்டும், புதிய மோட்டாா் வாகன சட்டத் திருத்தம், மின்சார விநியோக சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும், சம வேலைக்கு சம ஊதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவாா்க்கக் கூடாது, இளைஞா்களுக்கு தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு சமூக சட்ட பாதுகாப்பை உருவாக்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, ஆஷா பணியாளா்களை தொழிலாளா்களாக அங்கீகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில் திரளான தொழிலாளா்கள் கலந்துகொண்டு, மத்திய அரசின் தொழிலாளா் விரோத கொள்கைகளைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com