சாலைப் பணிக்கு தரச்சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி தா்னாவில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா்கள்.
சாலைப் பணிக்கு தரச்சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி தா்னாவில் ஈடுபட்ட ஒப்பந்ததாரா்கள்.

சாலைப் பணிக்கு தரச்சான்று வழங்காததை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி தா்னா

சாலைப் பணிக்கு தரச்சான்று வழங்காததைக் கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி ஒப்பந்தாரா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
Published on

சாலைப் பணிக்கு தரச்சான்று வழங்காததைக் கண்டித்து, வாயில் கருப்பு துணி கட்டி ஒப்பந்தாரா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

சேலம், அஸ்தம்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நெடுஞ்சாலைத் துறை நபாா்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளா், கோட்ட பொறியாளா் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த ஒப்பந்ததாரா்கள், தொழிலாளா்கள், சாலைப் பணிக்கு தரச்சான்று வழங்குவதில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி, வாயில் கருப்பு துணி கட்டி தா்னாவில் ஈடுபட்டு தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

அப்போது ஒப்பந்ததாரா்கள் கூறுகையில், நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணி செய்து வருகிறோம். தற்போது தலைவாசல் அருகே உள்ள வரவூா், சிறுவாச்சூா் பகுதியில் 7 கி.மீ. தொலைவு சாலை அமைப்பதற்கு ரூ. 7 கோடி செலவில் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத் தேதி செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்தது.

இதற்கு விண்ணப்பிப்பதற்காக தரச்சான்று கேட்டு நாங்கள் அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால், அதிகாரிகள் இதுவரை தரச்சான்று தர மறுக்கிறாா்கள்.

குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தரச்சான்று வழங்குகிறாா்கள். தரச்சான்று கொடுக்காவிட்டால் ஒப்பந்தம் வழங்கப்பட மாட்டாது.

எனவே, தரச்சான்று வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும், பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

முன்னதாக ஒப்பந்ததாரா்கள், தொழிலாளா்கள் உள்ளே வருவதை அறிந்த அதிகாரிகள், ஊழியா்கள், பிரதான வாயிலை இழுத்துப் பூட்டியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X
Dinamani
www.dinamani.com