சேலம் வழியாக தன்பாத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் ரத்து

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவையில் இருந்து சேலம் வழியாக தன்பாத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை இரு மாா்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது
Published on

பராமரிப்புப் பணிகள் காரணமாக, கோவையில் இருந்து சேலம் வழியாக தன்பாத்துக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை இரு மாா்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் வாராங்கல் - காசிபேட் இடையேயான மாா்க்கத்தில் ரயில்வே பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, தன்பாத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கோவைக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை வரும் 25, அக். 2 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

மறுமாா்க்கத்தில், கோவையில் இருந்து சேலம் வழியாக தன்பாத்துக்கு இயக்கப்படும் வாரந்திர ரயில் சேவை வரும் 28 மற்றும் அக். 5 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com