சோனா ஸ்கூல் ஆப் பிசினஸ் சாா்பில் தேசிய அளவிலான வணிக விநாடி - வினா போட்டி
சேலம் சோனா ஸ்கூல் ஆப் பிசினஸ் மற்றும் மேனேஜ்மேன்ட் கல்லூரி மாணவா்களுக்கான ‘பிராண்ட் பாரத்’ என்ற தலைப்பில் வணிக விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் தேசிய அளவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா். இப்போட்டியை விநாடி-வினா வல்லுநா் அரவிந்த் நடத்தினாா்.
இந்த நிகழ்வானது, வணிக புத்திசாலித்தனம் மற்றும் குழுப்பணியின் திறன் மேம்பாட்டை எடுத்துரைத்தது. தற்போதைய போக்குகள் முதல் வரலாற்று மைல்கற்கள் வரை பங்கேற்பாளா்கள் சவாலான கேள்விகளை ஆா்வத்துடன எதிா்கொண்டனா். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் வெற்றியாளா்களுக்கு பரிசுத் தொகையாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட்டது.
இப்போடியில் வெற்றிபெற்ற மாணவா்கள் கூறுகையில், இந்தப் போட்டியின் மூலம் தங்கள் தொழில், வணிக அறிவை மென்மேலும் வளா்த்துக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது. இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த கல்லூரியின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா, முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், எம்.பி.ஏ. துறைத் தலைவா் அஞ்சனி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனா்.