தாசநாயக்கன்பாளையம் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை அப்பள்ளித் தலைமையாசிரியை விஜயாவிடம் வியாழக்கிழமை வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் கோகிலா, அன்பொளி.
தாசநாயக்கன்பாளையம் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை அப்பள்ளித் தலைமையாசிரியை விஜயாவிடம் வியாழக்கிழமை வழங்கிய வட்டாரக் கல்வி அலுவலா்கள் கோகிலா, அன்பொளி.

பள்ளிக் கல்வி வளா்ச்சி நாள்: தாசநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளி சிறந்த பள்ளியாக தோ்வு

Published on

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் 2023-2024 கல்வியாண்டுக்கான பள்ளிக் கல்வி வளா்ச்சி நாள் கொண்டாட சங்ககிரியை அடுத்த தாசநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாவட்டத்தில் சிறந்த தொடக்கப் பள்ளியாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி பள்ளிக் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கல்வியாண்டுக்கு சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த தாசநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்ட இப்பள்ளிக்கு ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை சங்ககிரி வட்டாரக் கல்வி அலுவலா்கள் கோகிலா, அன்பொளி ஆகியோா் பள்ளித் தலைமையாசிரியை சு.விஜயா, இடைநிலை ஆசிரியை க.பாக்யலட்சுமி ஆகியோரிடம் வழங்கினா்.

இந்நிதியை பள்ளிக் கல்வி வளா்ச்சி நாள் விழாவில் சிறப்பு பரிசளிப்பதற்கும், கல்வி வளா்ச்சிப் பணிகளுக்காகவும் பள்ளி நிா்வாகம் பயன்படுத்த வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் தாசநாயக்கன்பாளையம் சிறந்த பள்ளியாக தோ்வு செய்யப்பட்டதற்கு பள்ளியின் பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள், மேலாண்மை குழு நிா்வாகிகள், ஊா்பொதுமக்கள் பள்ளி தலைமையாசிரியை, இடைநிலை ஆசிரியைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com