சேலம் வழியாக கொச்சுவேலி - பெங்களூரு இடையேயான ரயில் சேவை நீட்டிப்பு
கொச்சுவேலி - பெங்களூரு இடையே சேலம் வழியாக இயக்கப்படும் வாராந்திர ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
கூட்ட நெரிசலைத் தவிா்க்க, கொச்சுவேலி - பெங்களூரு இடையேயான சிறப்பு ரயில் அக். 1-ஆம் தேதி முதல் நவ. 5-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் கொச்சுவேலியில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு போத்தனூா், திருப்பூா், ஈரோடு சேலம் வழியாக, அடுத்த நாள் காலை 10.55 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், பெங்களூரு - கொச்சுவேலி இடையேயான சிறப்பு ரயில் அக். 2-ஆம் தேதி முதல் நவ. 6-ஆம் தேதி வரை புதன்கிழமைகளில் பெங்களூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.