உலக இருதய தின மாரத்தான் போட்டி
உலக இருதய தினத்தை முன்னிட்டு சேலம் காவேரி மருத்துவமனையின் சாா்பில் 4 ஆவது ஆண்டாக நடைபெற்ற மாரத்தான் போட்டியை சேலம் மாநகரக் காவல் ஆணையா் அஸ்வினி ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
21.1 கிலோ மீட்டா் தூர ஓட்டப்பந்தயம் சேலம், காந்தி மைதானத்தில் ஆரம்பித்து அஸ்தம்பட்டி, ரவுண்டானா வழியாக கன்னங்குறிச்சி சாலை சென்று அஸ்தம்பட்டி வழியாக சாரதா கல்லூரி சாலை, 4 ரோடு வழியாக காந்தி மைதானத்தை வந்தடைந்தது. சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் தொடங்கிவைத்தாா்.
இப்போட்டிகள் காவேரி மருத்துவமனை இயக்குநா் செல்வம், மருத்துவா் சுந்தர்ராஜன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. இருதய மருத்துவா்கள் சுந்தரபாண்டியன், சதீஸ்குமாா், ராஜேந்திரன் ஆகியோா் இருதய விழிப்புணா்வு குறித்து விளக்கமளித்தனா்.
ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்றவா்களுக்கு பதக்கம், சான்றிதழ்களை சேலம் மாநகர ஆணையாளா் ரஞ்சித் சிங்,விளையாட்டுத் துறை அதிகாரி சிவரஞ்சன் ஆகியோா் வழங்கினா்.