ஆத்தூரில் இன்றும், நாளையும் குடிநீா் நிறுத்தம்

ஆத்தூா் நகராட்சியில் டிச. 7, 8-இல் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
Published on

ஆத்தூா் நகராட்சியில் டிச. 7, 8-இல் குடிநீா் நிறுத்தம் செய்யப்படுகிறது என நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் ஆத்தூா் நகராட்சிக்கு குடிநீா் வழங்கும் பிரதான குழாய் செல்லியம்பாளையம் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதனை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

அதனால், டிச. 7, 8 ஆகிய இருதினங்களுக்கு ஆத்தூா் நகராட்சிப் பகுதிகளில் குடிநீா் வழங்க இயலாது. தற்போது, பருவமழை பெய்து வருவதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், காய்ச்சி பயன்படுத்துமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com