சேலம்
சேலம் மாநகராட்சியில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்
சேலம் மாநகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை (டிச. 8) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
சேலம் மாநகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை (டிச. 8) ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுகிறது என மாநகராட்சி ஆணையா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் மாநகராட்சியின் தனிக்குடிநீா் திட்டம் செயல்படும் மேட்டூா், தொட்டில்பட்டி பகுதியில் இயங்கிவரும் தலைமை நீரேற்றத்தில் மோட்டாா் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. இதனால், மாநகராட்சிப் பகுதியில் திங்கள்கிழமை ஒருநாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.