சேலம்
பாபா் மசூதி இடிப்பு தினம்: 3,500 போலீஸாா் பாதுகாப்பு
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சேலம் மாநகரில் 3,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சேலம் மாநகரில் 3,500 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
சேலம் காவல் ஆணையா் அனில்குமாா் கிரி தலைமையில் 3,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவுமுதல் ரயில்நிலையம், ரயில் தண்டவாளங்கள், புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கோயில்கள், மசூதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், ஊரகப் பகுதிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் தலைமையில் போலீஸாா் அனைத்துப் பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.