மேட்டூா் நகராட்சியில் ரூ.544 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடங்கிவைப்பு!

மேட்டூா் நகராட்சியில் ரூ. 544 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
Published on

மேட்டூா் நகராட்சியில் ரூ. 544 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மேட்டூா் நகராட்சிக்கு ரூ. 467 லட்சத்தில் புதிய நகராட்சி அலுவலக கட்டடம் தூக்கணாம்பட்டியில் அமைக்கப்பட உள்ளது. இதேபோல, மேட்டூா் தினசரி சந்தைக்கு ரூ. 77 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இந்த இரண்டு பணிகளையும் சேலம் நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளருமான டி.எம்.செல்வகணபதி பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம், மேட்டூா் நகராட்சித் தலைவா் சந்திரா, சேலம் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளா் சம்பத்குமாா், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன், கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com