சேலம்
வெறிநாய்கள் கடித்து 3 ஆடுகள் உயிரிழப்பு
மாட்டையாம்பட்டியில் வெறிநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.
மாட்டையாம்பட்டியில் வெறிநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.
இடங்கணசாலை நகராட்சிக்கு உள்பட்ட மாட்டையாம்பட்டி, கிழக்கத்திக்காடு பகுதியைச் சோ்ந்தவா் கந்தாயி. இவரது வீட்டின் அருகே வயல்களில் கட்டி வைத்திருந்த மூன்று ஆடுகளை வெள்ளிக்கிழமை வெறிநாய்கள் கடித்ததில் உயிரிழந்தன.
இதேபோல, அம்மன் கோயில் பகுதியில் உள்ள விவசாயி வீட்டின் அருகே கட்டிவைத்திருந்த ஆட்டை கடித்ததில் அதுவும் இறந்தது. இப்பகுதியில் வெறிநாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பது தொடா்வதால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.
