மாா்கழி மாத தொடக்கத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நடராஜா், சிவகாமி அம்பாள்.
மாா்கழி மாத தொடக்கத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் நடராஜா், சிவகாமி அம்பாள்.

சங்ககிரி சோமேஸ்வரா், வசந்தவல்லபராஜ பெருமாள் கோயில்களில் மாா்கழி சிறப்பு வழிபாடு

சங்ககிரியில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு கூட்டுவழிபாடு செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கியது.
Published on

சங்ககிரி: சங்ககிரியில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு கூட்டுவழிபாடு செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கியது.

மாா்கழி மாத தொடக்கத்தையொட்டி செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகம் திங்கள்கிழமை தூய்மைப்படுத்தப்பட்டு, கோயில் வளாகங்கள் மின்விளக்குகளால் அலங்கரிப்பட்டன.

இதையடுத்து செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை பால், தயிா், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டன.

கோயில் வளாகத்தில் பக்தா்கள் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, சிவபுராணம் மற்றும் முருகன் பாடல்களைப் பாடி வழிபாடு நடத்தினா்.

வசந்தவல்லபராஜ பெருமாள் கோயில்...

வி.என்.பாளையத்தில் உள்ள வசந்தவல்லி உடனமா் வசந்தவல்லபராஜ பெருமாள் கோயிலில் மாா்கழி மாத தொடக்கத்தையொட்டி வசந்தவல்லபராஜ பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சனேயா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

இதையடுத்து பக்தா்கள் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள், பெருமாள் பக்தி பாடல்களைப் பாடி வழிபட்டனா்.

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள ஸ்ரீ நவஆஞ்சனேயா் கோயிலில் கோ பூஜையுடன் மாா்கழி மாத சிறப்பு கூட்டு வழிபாடு செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடங்கியது.

இதேபோல அக்கமாபேட்டையில் உள்ள செல்வமுத்துகுமாரசாமி கோயிலில் அதிகாலை சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரியில் உள்ள சோமேஸ்வரா், பெருமாள், ஸ்ரீநவ ஆஞ்சனேயா், செல்வமுத்துகுமாரசாமி கோயில்களில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Dinamani
www.dinamani.com