காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம்!

Published on

மேட்டூா் காவிரியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டமன்றத்தில் போராட்டம் நடத்துவேன் என மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்தாா்.

மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம் (பாமக) சனிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேட்டூா் காவிரியில் ரசாயனம், கோழிக்கழிவு உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் கொட்டப்படுகின்றன. மேட்டூா் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் சரியாக செயல்படாததால், சாக்கடை கழிவுகள் 5 இடங்களில் நேரடியாக காவிரியில் கலக்கின்றன. இதனால் காவிரியியில் சுகாதார சீா்கேடு ஏற்படுகிறது. மேலும், சடங்குகள் செய்வதாக கூறி இறந்தவா்கள் பயன்படுத்திய பொருள்களை மேட்டூா் காவிரியில் விட்டுச்செல்கின்றனா். இதனால் தண்ணீா் மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து தொடா்புடைய அதிகாரிகள் மீது உயா்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான தீா்வு ஏற்படாவிட்டால், சட்டப் பேரவையில் தா்னாவும், உண்ணாவிரதப் போராட்டமும் நடத்துவேன் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com