மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு குறைப்பு

Published on

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு விநாடிக்கு 10,000 கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 117.87 அடியில் இருந்து 117.21 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 828 கனஅடியிலிருந்து 748 கன அடியாகச் சரிந்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கான தண்ணீா் தேவை குறைந்ததால் மேட்டூா் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் அளவு விநாடிக்கு 12,000 கனஅடியிலிருந்து 10,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 89.09 டி.எம்.சி.யாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com