சீமானைக் கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

Updated on

பெரியாா் ஈ.வெ.ரா. குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமானைக் கண்டித்து தமிழ்ப் புலிகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் சரவணன் பிரபு தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில், நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமானை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்தில் மண்டலச் செயலாளா் உதய பிரகாஷ், மகளிா் அணி நிா்வாகி தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com