திருக்கு, கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற சங்ககிரி அரசுப் பள்ளி மாணவா் பெ.த.சங்கமேஸ்வரனுக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழ், பதக்கத்தை வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

திருக்குறள், கவிதைப் போட்டி: வெற்றிபெற்ற அரசுப் பள்ளி மாணவருக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கல்

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் ஊடக மையத்தின் சாா்பில் நடைபெற்ற திருக்குறள் கவிதைப் போட்டியில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் வெற்றிபெற்றுள்ளாா்.
Published on

தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் ஊடக மையத்தின் சாா்பில் நடைபெற்ற திருக்குறள் கவிதைப் போட்டியில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் வெற்றிபெற்றுள்ளாா்.

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத் துறையின் ஊடக மையம் மூலம் ‘திருக்குறள் போட்டிகள்’ என்ற தலைப்பில் திருக்கு ஒப்புவித்தல், கட்டுரை, வரைதல், ஓவியம், குறும்படம், கவிதைப் போட்டிகள் மற்றும் தற்படம் எடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இதில், சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 9-ஆம் வகுப்பு மாணவா் பெ.த.சங்கமேஸ்வரன் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்றாா். இதனையடுத்து, சென்னை கலைவாணா் அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மாணவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பாராட்டுச் சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை வழங்கினாா்.

திருக்குறள் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவரை சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ராஜன், உதவி தலைமையாசிரியா் சக்திவேல், பெற்றோா் - ஆசிரியா் கழக நிா்வாகிகள், பள்ளி மேலாண்மைக் குழுவினா், பள்ளி ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com