ஓமலூா் ஏவிஎஸ் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

Published on

ஓமலூா் ஏ.வி.எஸ் கலை, அறிவியல் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏவிஎஸ், சக்தி கைலாஷ் கல்விக் குழுமத்தின் தலைவா் க.கைலாசம், மாணவா்களுக்கான போட்டிகளைத் தொடங்கிவைத்தாா், விழாவில் அனைத்துத் துறைகளையும் சாா்ந்த மாணவா்கள் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி போன்ற அனைத்து போட்டிகளில் கலந்து கொண்டனா். மேலும் மாணவா்களைக் கொண்டு கல்லூரி மைதானத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தையும், அசோக சக்கரத்தையும் வரைந்திருந்தனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளா் கை. ராஜ விநாயகம், தாளாளா் கை. செந்தில்குமாா், கல்லூரி முதல்வா் முனைவா் எம். மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகத்தினா், பேராசிரியா்கள் இணைந்து செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com