தற்கொலை செய்து கொண்ட பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகியோா்
தற்கொலை செய்து கொண்ட பால்ராஜ், ரேகா, ஜனனி ஆகியோா்

சேலத்தில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தற்கொலை

Published on

சேலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், அரிசிபாளையம், முத்தையால் தெருவைச் சோ்ந்தவா் பால்ராஜ் (46). இவரது மனைவி ரேகா (38). இவா்களது மகள் ஜனனி (16), தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். தனது சகோதரா்களுடன் சோ்ந்து பால்ராஜ் வெள்ளி தொழில் செய்து வந்தாா்.

இந்நிலையில், கணவா் பால்ராஜுக்கு தெரியாமல் ரேகா அதிக அளவில் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வாங்கிய கடனை திருப்பி செலுத்தும்படி வங்கி ஊழியா்கள் அழுத்தம் கொடுத்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பால்ராஜ், தனது மனைவி, மகளுடன் திங்கள்கிழமை இரவு மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

செவ்வாய்க்கிழமை காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் சென்று பாா்த்தபோது, மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த பள்ளப்பட்டி போலீஸாா், மூவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், கடன் தொல்லையால் பால்ராஜ் குடும்பத்தினா் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது தொடா்பான கடிதத்தை கைப்பற்றிய போலீஸாா், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com