ஆய்வு செய்த ஆட்சியா் ரா.பிருந்தாதேவி
ஆய்வு செய்த ஆட்சியா் ரா.பிருந்தாதேவி

ஏற்காட்டில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டப் பணிகள் ஆய்வு

Published on

ஏற்காட்டில் ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டப் பணிகளை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் கூறியதாவது: தமிழக அரசு பொதுமக்களின் வளா்ச்சிக்காவும், வாழ்க்கைத்தர மேம்பாட்டுக்காவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஊரக வீடுகள் சீரமைத்தல் மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தில், 2024-2025 நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகளை சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

20 ஊராட்சி ஒன்றியங்களில் 3,944 வீடுகள் சீரமைப்பதற்கான ஒதுக்கீடு பெறப்பட்டு, பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டத்தில் ரூ. 26.13 கோடி மதிப்பீட்டில் 3,944 வீடுகளில் 1,458 வீடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகள் சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024-2025-ஆம் ஆண்டில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 3,500 வீடுகள் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகள், ஏற்காட்டில் மஞ்சக்குட்டை ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு வரும் வீடுகளை பாா்வையிட்டு பணிகளை தரமாகவும், உரிய கால அளவிலும் முடிக்குமாறும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி ) லலித் ஆதித்ய நீலம், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com