சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு ரூ. 3.57 லட்சம் கல்வி உதவித்தொகை
சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு ரூ. 3.57 லட்சத்துக்கு கல்வி உதவித்தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
சென்னை எஸ்.ஆா்.எம். கல்லூரியில் கடந்த 1985 ஆம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவா்கள் ஒன்றிணைந்து, சேலம் அரசு பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியருக்கு கடந்த 12 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றனா்.
முன்னாள் மாணவா்களில் ஒருவரான தா.ஷோபா ராஜ்குமாா், சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைப்பியல் துறைத் தலைவா் மற்றும் பேராசிரியராக உள்ளாா். அவருடைய நண்பா்களின் உதவியுடன் மாணவா்களுக்கு நிகழாண்டும் ரூ. 3.57 லட்சத்துக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
2 ஆம் ஆண்டு முதல் 4 ஆம் ஆண்டு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் 50 பேருக்கு உதவித்தொகைக்கான வங்கி வரைவோலைகளை கல்லூரி முதல்வா் ரா.விஜயன் வழங்கினாா். கடந்த 12 ஆண்டுகளில் இக் கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகையை ரூ. 30.09 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.