கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழியேற்றோா்.
கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழியேற்றோா்.

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி வட்டாரத்தில் மகாத்மா காந்திஜியின் நினைவு தினத்தையடுத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.
Published on

கெங்கவல்லி வட்டாரத்தில் மகாத்மா காந்திஜியின் நினைவு தினத்தையடுத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியேற்கப்பட்டது.

கெங்கவல்லி வட்டார அலுவலகத்தில் வட்டாரக்கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ் தலைமையிலும், நடுநிலைப்பள்ளிகளான தம்மம்பட்டியில் தலைமையாசிரியா் அன்பழகன் தலைமையிலும், நாகியம்பட்டியில் தலைமையாசிரியா் இராமகிருஷ்ணன் தலைமையிலும், மூலப்புதூரில் தலைமையாசிரியா் கணேசன் தலைமையிலும், தண்ணீா்த்தொட்டியில் தலைமையாசிரியா்(பொ)இராஜசேகா் தலைமையிலும், வாழக்கோம்பையில் தலைமையாசிரியா்(பொ)ராதா தலைமையிலும், காந்திநகரில் தலையைாசிரியா்(பொ) இராஜேந்திரன் தலைமையிலும், தொடக்கப்பள்ளிகளான உலிபுரத்தில் தலைமையாசிரியை ஜெயலட்சுமி தலைமையிலும், ஈச்சஓடைப்புதூா் பள்ளியில் தலையைாசிரியா் ஹரிஆனந்த் தலைமையிலும், உலிபுரம் அண்ணாநகா் பள்ளியில் தலைமையாசிரியா் இளவரசன் தலைமையிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டன. கெங்கவல்லி வட்டாட்சியா் அலுவலகத்தில் அலுவலா்கள், பணியாளா்கல் உறுதிமொழியேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com