மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய இருவருக்கு அபராதம்!

மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Published on

மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கெங்கவல்லி அருகே நடுவலூரைச் சோ்ந்த பழனிவேல் (57) என்பவா், விவசாய நிலத்துக்கு வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பிலிருந்து வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளாா்.

இதுகுறித்து மின் திருட்டு தடுப்புப்படை குழுவினா் ஆய்வு மேற்கொண்டதில், மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியது உறுதியானது. அதனையடுத்து, பழனிவேலுக்கு ரூ. 38,848 அபராதம் விதித்தனா்.

இதேபோல, வலசக்கல்பட்டி பகுதியில் மின் இணைப்பை முறைகேடாக பயன்படுத்திய ஜெயந்தி என்பவருக்கு ரூ. 38 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com