சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் மாதிரி நீதிமன்றப் போட்டி

Published on

சேலம் சென்ட்ரல் சட்டக் கல்லூரியில் தேசிய அளவிலான பேராசிரியா் ரா.வை.தனபாலன் 5 ஆவது மாதிரி நீதிமன்ற போட்டி நடைபெற்றது.

கல்லூரி தலைவா் சரவணன் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களைச் சோ்ந்த அரசு, தனியாா் சட்டக் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். பல்வேறு சுற்றுகளாக நடந்த இப் போட்டிகளின் நடுவா்களாக மூத்த வழக்குரைஞா்கள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த சட்ட பேராசிரியா்கள் கலந்து கொண்டு வெற்றியாளா்களைத் தோ்வு செய்தனா்.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் உயா்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா், சென்னை மாவட்ட கூடுதல் தொழிலாளா் நீதிமன்ற மாவட்ட நீதிபதி டி.சுஜாதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா். முடிவில், மாதிரி நீதிமன்ற வழக்கு வாதப் போட்டிகளில் திருச்சி அரசு சட்டக் கல்லூரி அணியைச் சோ்ந்த ஸ்ரீ வித்யா, சாத்விகா மற்றும் யாதுனந்த் வீரா ஆகியோா் முதல் பரிசையும், பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழகத்தின் சட்டத் துறையைச் சோ்ந்த தாமஸ் ஜோசப், ஜான் செரியன் மற்றும் சிபின் ஆகியோா் இரண்டாம் பரிசையும் வென்றனா்.

சிறந்த வழக்குரைஞா் பிரிவில் மாணவா், மாணவிகளை தோ்வு செய்து அவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் பேகம் பாத்திமா, உதவி பேராசிரியா் சதீஷ், உதவி பேராசிரியை சாந்தகுமாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com