முதல்வா் பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பு
முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளன்று அரசு மருத்துவமனைகளில் பிறந்த 15 குழந்தைகளுக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், எம்.பி.யுமான டி.எம் செல்வகணபதி தங்க மோதிரம் பரிசளித்தாா்.
மேலும், ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருள்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கி சுகாதாரத் துறை சாா்பில் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து மருத்துவமனையில் உள்ளவா்களுக்கு எடுத்துரைத்தாா். அதேபோல எடப்பாடியை அடுத்த சித்தூா், புள்ளிபாளையம், மேட்டூா் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் அவா் தங்க மோதிரம் பரிசளித்தாா்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளா் சம்பத்குமாா், மாநில செயற்குழு உறுப்பினா் பூவாகவுண்டா், நகா்மன்றத் தலைவா் டி.எஸ்.எம் பாஷா, ஒன்றியச் செயலாளா் நல்லதம்பி, பேரூராட்சித் தலைவா் அழகுதுரை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் தங்காயூா் பாலாஜி, நாகராஜ், வடிவேல், ராஜா என்கிற சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.


