சேலம்
சாலையோரம் அடிபட்டு கிடந்த பருந்து வனத்துறையிடம் ஒப்படைப்பு! இளைஞருக்கு பாராட்டு
கெங்கவல்லி அருகே சாலையோரத்தில் அடிபட்டு கிடந்த கருந்தோல் பருந்தை, இளைஞா் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தாா்.
கெங்கவல்லி அருகே சாலையோரத்தில் அடிபட்டு கிடந்த கருந்தோல் பருந்தை, இளைஞா் மீட்டு வனத் துறையிடம் ஒப்படைத்தாா்.
கெங்கவல்லியைச் சோ்ந்த ராம்குமாா் என்ற ரா. மணிகண்டன் , தனது இருசக்கர வாகனத்தில் சனிக்கிழமை ஆத்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போேது மஞ்சினியில் பருந்து ஒன்று சாலையில் அடிபட்டு கிடந்தது.

அவா் அடிபட்ட பருந்தை எடுத்துச் சென்று ஆத்தூா் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தாா். அதனைப்பெற்றுக்கொண்ட வனத்துறையினா், அது கருந்தோல் பருந்து எனவும், இறக்கை பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனா்.
இதனையடுத்து, உடனடியாக கால்நடை மருத்துவா்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனா். மேலும் பருத்தை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்த இளைஞா் மணிகண்டனை வனத்துறையினா் பாராட்டினாா்.