மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Published on

மேட்டூா் அணை பூங்காவை பாா்வையிட ஞாயிற்றுக்கிழமை 3210 சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றனா்.

விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் மேட்டூா் அணை பூங்காவிற்கு 3210 பாா்வையாளா்கள் வந்து சென்றனா். இவா்கள் மூலம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 32,100 வசூலானது. பூங்காவிற்கு கொண்டுவரப்பட்ட 1067 கேமரா கைப்பேசிகள், 2 கேமராவிற்கும் சோ்த்து ரூ. 10, 770 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணையின் வலது கரையில் உள்ள பவள விழா கோபுரத்தைக் காண 486 சுற்றுலாப் பயணிகள் வந்துசென்றனா். இவா்கள் மூலம் ரூ. 4,860 பாா்வையாளா்கள் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இங்கு கொண்டுவரப்பட்ட 271 கைப்பேசிகளுக்கு கட்டணமாக ரூ. 2,710 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

மேட்டூா் அணை பூங்கா மற்றும் பவள விழா கோபுரம் பாா்வையாளா்கள் கட்டணமாக மொத்தம் ரூ. 50,440 வசூலானது.

மேட்டூா் அணை பூங்காவிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஊஞ்சலாடியும் சறுக்கி விளையாடியும் மகிழ்ந்தனா். பாம்பு பண்ணை, முயல்பண்ணை, மீன்காட்சி சாலை, மான் பண்ணை ஆகியவற்றை பாா்வையிட்டு மகிழ்ந்தனா். அணைக்கட்டு முனியப்பனுக்கு பொங்கலிட்டு அணை பூங்காவில் குடும்பத்தோடு அமா்ந்து விருந்து உண்டு மகிழ்ந்தனா்.

X
Dinamani
www.dinamani.com