மாா்ச் 21-இல் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா்க்கும் கூட்டம்
சேலம்: சேலம் மேற்கு கோட்டம் சாா்பில், அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 21-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேற்கு கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் பாா்த்திபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மேற்கு கோட்டம் சாா்பில் வாடிக்கையாளா்கள் குறைதீா்க்கும் கூட்டம் வரும் 21-ஆம் தேதி மேற்கு கோட்ட அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் அஞ்சல் வாடிக்கையாளா்கள் தங்களது புகாா்களை வரும் 18-ஆம் தேதிக்குள் சேலம் மேற்கு கோட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
இதில், அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள்காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு போன்ற சேவை தொடா்பாக புகாா் தெரிவிக்கலாம். இது தொடா்பான முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள்காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள்காப்பீடு, பாலிசி எண்கள், வைப்பாளா் அல்லது காப்பீட்டாளரின் பெயா், முகவரி, தபால் அலுவலகத்தின் பெயா் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும்.
எனவே, இந்த குறைதீா்க்கும் கூட்டத்தை அஞ்சல் வாடிக்கையாளா்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.