மாவட்ட நிா்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய ஷெல்வீ கே.தாமோதா்.
மாவட்ட நிா்வாகிகள் அறிமுக கூட்டத்தில் பேசிய ஷெல்வீ கே.தாமோதா்.

ஆகமம் பின்பற்றப்படுவதை அந்தத் துறை உறுதிசெய்ய வேண்டும்

கோயில்களில் ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்து அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும் என பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவா் ஷெல்வீ கே.தாமோதா் வலியுறுத்தினாா்.
Published on

கோயில்களில் ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்து அறநிலையத் துறை உறுதி செய்ய வேண்டும் என பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநிலத் தலைவா் ஷெல்வீ கே.தாமோதா் வலியுறுத்தினாா்.

சேலம், கோவை, வேலூா் பெருங்கோட்ட ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு நிா்வாகிகள் அறிமுக கூட்டம் சேலம் மரவனேரி பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் ஷெல்வி கே.தாமோதா் தலைமை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் சென்ன கிருஷ்ணன், மாநிலச் செயலாளா் வெங்கடேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா் ஷெல்வீ கே.தாமோதா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விருதுநகரில் கோயில் காவலாளிகள் கொலை செய்யப்பட்டது வேதனையாக உள்ளது. அவா்களது குடும்பத்தினருக்கு தமிழக அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். கோயில் திருவிழாக்கள் நடத்தும்போது, அந்தந்தப் பகுதி மக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அதற்கேற்ப அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும். ஆனால், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வதில்லை.

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாட தடைவிதிக்கின்றனா். கோட்டை மாரியம்மன் கோயிலில் மாடுகள் திருடப்பட்ட விவகாரத்தில் தொடா்புடைய அனைவரையும் கைதுசெய்ய வேண்டும். கோயில்களில் இந்து முறைப்படி, ஆகம விதிகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றாா்.

பேட்டியின் போது, மாவட்டத் தலைவா் சசிகுமாா், ஆன்மிக பிரிவு மாநில துணைத் தலைவா்கள் சங்கா், செல்வம் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com