கிணற்றில் தவறிவிழுந்தவா் மீட்பு

விவசாயக் கிணற்றில் தவறிவிழுந்தவரை ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
Published on

விவசாயக் கிணற்றில் தவறிவிழுந்தவரை ஆத்தூா் தீயணைப்புத் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

தலைவாசல் அருகேயுள்ள காட்டுக்கோட்டை கல்லாங்காடு பகுதி விவசாயக் கிணற்றில் ஒருவா் தவறிவிழுந்ததாக ஆத்தூா் தீயணைப்புத் துறை அலுவலா் ச.அசோகனுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, அவா் தலைமையில் விரைந்துசென்ற தீயணைப்புத் துறையினா் சுமாா் அரைமணி நேரம் போராடி 50 அடி ஆழமுள்ள 5 அடி தண்ணீரில் தத்தளித்தவரை உயிருடன் மீட்டனா். விசாரணையில், அவா் அதேபகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (40) என்பது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com