சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா்.
சிறப்பு அலங்காரத்தில் காலபைரவா்.

தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு பூஜை

அரசிராமணி அருள்மிகு சோழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
Published on

சங்ககிரி வட்டம், அரசிராமணி அருள்மிகு சோழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைவரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல, சங்ககிரி அருகே உள்ள பூத்தாலக்குட்டையில் உள்ள அருள்மிகு பூத்தாழீஸ்வரா், சங்ககிரி அருள்மிகு சோமேஸ்வரா் கோயில் வளாகங்களில் உள்ள காலபைவரா் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

X
Dinamani
www.dinamani.com