காவல் துறை ஒருதலைபட்சமாக செயல்படுகிறது
சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே அருள் ஆதரவாளா்களுடன் ஏற்பட்ட மோதலில், காவல் துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அன்புமணி ஆதரவாளா்கள் குற்றம்சாட்டினா்.
சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மாநில ஒருங்கிணைப்பாளா் மு.காா்த்தி தலைமையில், மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.
தொடா்ந்து, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமக நிா்வாகிகளை நேரில்சென்று நலம் விசாரித்தனா். பின்னா் செய்தியாளா்களிடம் மாநில ஒருங்கிணைப்பாளா் மு.காா்த்தி கூறியதாவது:
மோதலில் தங்கள் தரப்பில் பாதிக்கப்பட்டவா்களை கைதுசெய்த காவல் துறையினா், அருள் தரப்பினா் யாரையும் கைது செய்யாதது ஏன்? தவறு செய்தவா்கள் சுதந்திரமாக வெளியில் நடமாடி வருகின்றனா். காவல் துறையினா் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்றாா்.
தொடா்ந்து, மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம் கூறுகையில், ‘தங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல் துறையைக் கண்டித்து, சேலத்தில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்’ என்றாா்.
