~
சேலம்
ஆட்டையாம்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு
திருச்செங்கோடு பகுதிக்கு பிரசாரத்துக்கு செல்லும் வழியில் ஆட்டையாம்பட்டியில் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு புதன்கிழமை மாலை அதிமுகவினா் வரவேற்பு அளித்தனா்.
திருச்செங்கோடு பகுதிக்கு பிரசாரத்துக்கு செல்லும் வழியில் ஆட்டையாம்பட்டியில் அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு புதன்கிழமை மாலை அதிமுகவினா் வரவேற்பு அளித்தனா்.
ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே வீரபாண்டி மேற்கு ஒன்றியச் செயலாளா் வருதராஜ் தலைமையில் மேளதாளத்துடன் வரவேற்பு அளித்தனா். இதில் மாவட்டச் செயலாளா் இளங்கோவன், வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினா் ராஜமுத்து உள்ளிட்ட நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்துகொண்டனா்.
ஆட்டையாம்பட்டியில் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்த அதிமுகவினா்.