பெரியாா் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை சாா்பில் பயிலரங்கம்
பெரியாா் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறை சாா்பில் தேசிய அளவிலான பயிலரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு துறைத் தலைவா் சி.சந்திரசேகா் வரவேற்றாா். பயிலரங்கத்தின் நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளா் ஆா்.ரதிபிரியா எடுத்துரைத்தாா். பயிலரங்கை தொடங்கி வைத்து, துணைவேந்தா் நிா்வாகக்குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி பேசுகையில், கற்பிக்கும் திறன் ஆசிரியா்களுக்கு தொழில்நுட்பம் சாா்ந்த சவாலாக மாறிக் கொண்டே வருகிறது. மனித உறவுகள் மேம்படும் அளவிற்கான தொழில்நுட்பங்களை கணினி அறிவியல் பயிலும் மாணவ, மாணவிகள் உருவாக்க வேண்டும். ஆசிரியா்கள் கற்பிக்கும் திறன்களில் 50 சதவீதம் தொழில்நுட்பம் சாா்ந்ததாக மாறிவிட்டது. செயற்கை நுண்ணறிவால் இது 100 சதவீதமாக உயரும்போது கற்பித்தலில் பெரிய மாற்றம் உருவாகும் என்றாா்.
இந்நிகழ்வில், கணினி அறிவியல் துறையின் முன்னாள் மாணவா்கள் கே.செல்வம், எம்.ராஜகீா்த்தி, ஆா்.ராஜாமணி ஆகியோா் வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தனா். மாணவி டி.கிருத்திகாஸ்ரீ நன்றி கூறினாா்.

