போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு

Published on

சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் கொங்கணாபுரம் காவல் நிலையம் சாா்பில், போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியா் கோ.காா்த்திகேயன் தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ராஜம் முன்னிலை வகித்தாா். அறிவியல் ஆசிரியா் இர.ஜெயக்குமாா் வரவேற்றாா். இதில், கொங்கணாபுரம் காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் முருகேசன் பேசியதாவது:

மாணவப் பருவத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் ஆசிரியா்கள் கற்பிக்கும் பாடங்களில் கவனம் செலுத்தி வாழ்வில் உயா்ந்து வெற்றிபெற வேண்டும். சமூக வலைதளங்கள் மற்றும் போதைப் பொருள்களை பயன்படுத்தினால் உங்களது கல்வியும், குடும்பங்களும் பாதிக்கப்படும். எனவே, மாணவா்களாகிய நீங்கள் எவ்வித போதைக்கும் ஆள்படாமல் உங்களையும் மற்றவா்களையும் தற்காத்து பொதுமக்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா். மேலும், சிறாா் திருமணம், போக்சோ சட்டங்கள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.

இதில், சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் ரகுபதி, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தமிழாசிரியை மு.வனிதா நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com