முதியவரைக் கொன்ற இளைஞா் தலைமறைவு

Published on

வெள்ளாளப்பட்டி பகுதியில் முதியவரைக் கொன்ற இளைஞரை ஏத்தாப்பூா் போலீஸாா் தேடிவருகின்றனா்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (65) என்பவா் மதுரை வீரன் கோயில் அருகே புதன்கிழமை நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (எ) டெல்லி பெரியசாமி (19) என்பவா் மதுபோதையில் முதியவரை தகாத வாா்த்தைகளால் பேசியுள்ளாா். அதைக் கண்டித்த முதியவா், இளைஞரை நோக்கி சென்றபோது அங்கிருந்து இளைஞா் ஓடிவிட்டாா். பின்னா் வீட்டுக்குச் சென்ற முதியவா் வியாழக்கிழமை காலை சடலமாக கிடந்தாா்.

புகாரின் பேரில் ஏத்தாப்பூா் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், முதியவரை பின்தொடா்ந்து சென்ற டெல்லி பெரியசாமி, அவரைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்தது. தலைமறைவான டெல்லி பெரியசாமியை போலீஸாா் தேடிவருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com